காதலும் மதுவைப்போன்றது தான்
இரண்டிற்கும் பல ஒற்றுமைகள்
இருக்கத்தான் செய்கின்றது
உதாரணமாய் இரண்டுமே
தன்னையே தானே மறக்க, அழிக்க
மனிதன் எடுக்கும் முயற்சி,
இரண்டில் விழுந்தவனும்
அதை விடுவது கடினம் தான்..
ஆனால் இரண்டிற்கும்
ஒரே ஒரு வேற்றுமை தான்
மது அதிகமாய் உட்கொண்டால்
மனிதனை அழித்துவிடும்
காதலோ அதிகம் வெளிப்படுத்தினால்
தான் மனிதனை வாழவைக்கும்
என்னை பொறுத்தவரை நான்
இரண்டுமே பழக்கமில்லாதவன்
பழகிக்கொள்ளாதவன்
No comments:
Post a Comment