நட்பே, உனக்கு
என்ன தான் ஆயிற்று
என் எதற்கிந்த மாற்றம்
என் மேல் என்ன கோபம்
கோபத்தை காட்ட ஆயிரம்
வழி இருக்க மௌனத்தை
எதற்கெடுத்தாய் ??
எந்த ஆயுதம் ரணப்படுத்தி
கொல்லும் என்பதை
தெளிவாய் உணர்ந்த
கொலையியல் வல்லுநர்
ஆகிவிட்டயோ ???
உன் சமீபத்திய மௌனம்
தற்காலிகமானதுதான்
ஆயினும் இந்த சிறுமாற்றமும்
எனக்குள் பல பாதிப்பை
ஏற்படுத்தும் என்று அறியாயோ???
உன் நண்பனாய் ஒரு வேளை
உன் வார்த்தைகளை
கேளாமல் போயிருப்பேன்
ஆனால் உன் மௌனத்தை
உனாரமால் இருப்பது
எனக்கும் என் நட்புக்கும்
இழுக்கல்லவா???
வார்த்தைகளை பரிமாறி
நமக்குள்
புன்கையை பூக்க உதவிய
நட்பையே உன் மௌனத்தால்
காயப்படுத்த துணிந்தாயோ???
சிலவேளைகளில்
எனக்குநானே வாய்ப்பூட்டு
போட்டு கொண்டபோது
வார்த்தைகளின் வீரியத்தை
நீ எனக்கெடுத்துரைத்தாய்
அப்போது என் மௌனத்தால்
நீ பட்ட பாடுகளை
எடுத்துரைக்கத்தான் நீ
மௌனித்திருக்கிறாயோ??
இது ஒரு விதமான
பழிவாங்குதல் என்பதை
என்று உணர்வாயோ ??
அதிகமாய் காயப்பட்ட இதயமே
ஊமையாகிப்போகும்
என்று நானுமறிவேன்
அப்படி என்ன நானோ
என் நட்போ உன்னை
காயப்படுத்திவிட்டோம் ???
இந்த மாற்றத்துக்கு உன்னிடம்
ஆயிரம் காரணமிருக்கலாம்
அதை காட்டிலும் அதற்கு
தீர்வுகள் அதிகமிருக்கிறது
என்ற உண்மையை
அறியமறுக்க உன் மௌனமே
தடைக் கல்லென உணராயோ
நீயே இதை ஏற்கத்தயாராக
இல்லாவிடினும் சரி
உன் புன்னகையில் மட்டும்
பங்குகொள்ளும் பல
நண்பர்கள் உனக்கிருக்கலாம்
உன் சோகங்களிலும் கஷ்டங்களிலும்
உன் அருகில் இருக்க
விரும்பும் உண்மையான
உண்மையான நண்பன் நான் ...
அதனால் தான் நீ சிறு விஷயம்
என்று நினைக்கும் உன் மௌனத்திற்காக
இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறேன்
என்பதை ஒப்புக்கொள்வாயோ???
நான் பேச மறுத்தால் உனக்கென
என நீ கேட்பது தெளிவாய் கேட்கிறது
உனக்கு என்ன நின்று விடப்போகிறது
என்றும் கூட கேட்பாய்
நீ மட்டும் அல்ல என் நட்புவட்டத்துள்
காயப்படுத்தும் எதையும் நான்
எதிர்க்கத்தான் செய்வேன்
தவறினால் அது
சுற்றிக்கொண்டிருக்கும் என் உலகையே
அசையாமல் நிறுத்திப்போடுகின்றது
விட்டுக்கொடுத்து
போவதுதானே நட்பு
எனக்காய் உன் சோகங்களை
கோபங்களை
மறந்து உன் மௌனத்தை
விட்டுத்தரமாட்டயோ ???
நீ கோபத்தை விடமறுத்தால்
இந்த வீண் மௌனம் தொடரும்
நம் நட்பும் சிதறும்
அது உன் தவறினை நீ
உணர்ந்தால்,நம் மகிழ்ச்சியாய்
பேசிக்கொண்ட காலங்கள்
திரும்பும்,எந்த துன்பம்
வரினும் என் நட்பு
தேடிவந்து உதவும் ...
மறுபடியும் கேட்கிறேன்
எனக்காக உன் மௌனத்தை
தூக்கியெரி ...
No comments:
Post a Comment