Tuesday, December 13, 2011

மாற்றம்













மாற்றம் ஒன்று தான்
உலகில் மாறாததாம்
ஒத்துக்கொண்டேன்
உன்னை சந்தித்த போது
எனக்குள் ஏற்பட்ட
மாற்றங்களை கண்டு


அப்போது உணரவில்லை
நான் எமாற்றப்பட்டு
கொண்டிருக்கிறேன் என்று


இப்போததை
உணரும் போது நீ
எனக்குள் ஏற்படுத்திய
மாற்றங்களில் இருந்து
விடுபட முடியவில்லை
காரணம் நீ என்னை
ஏமாற்றி சென்றாய் என்பதை
என் மனம் இன்னமும் கூட
ஏற்கவும் இல்லை


என்னாலயே என்னை
புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை
என்றால் இனி யாரால் கூடும்
இதே நிலைமை தான் என்
மரணம்வரை எனவும்
எண்ணத் தோன்றுகிறது

எனக்கு மட்டும் என் 

மாற்றங்கள் மாறவில்லையே 
அது ஏன் ??
இப்போது மாற்றத்தின் நியதி
என்னானது??
எனக்கு மட்டும் அது
பொய்த்துப்போனதோ ??

காலம் பதில் சொல்லட்டும் .

No comments:

Post a Comment