சிலர்க்கு தேவையில்லாதவை
மற்றவர்க்கு அத்தியாவசியமாகிறது
அது போல் தான்
உனக்கு நான் தேவையில்லாதவனாய்
ஆகிவிட்டாலும், நான் உயிர் வாழ
நீ அத்தியாவசியமாகிறாய்...
ஒரு சிலர் தூக்கி எறிபவை
இன்னொருவருக்கு தேவைப்படுகிறது
என்னை தூக்கி எறிந்துவிட்டு சென்றாலும்
நீயும் உன் நினைவுகளும்
முக்கியமாய் உன் காதலும்
எனக்கு வெகுவாய் தேவைப்படுகிறது
ஒருகாலத்தில் தேவயற்றவையாய்
ஏறிந்தது,பிற்காலத்தில்
மிகவும் மதிப்பு பெறுகிறது
என்னை வேண்டாதவனாய் நீ
நினைத்தாலும், உன் நினைவுகளை
என் மனம் அன்றும்,இன்றும்,என்றும்
பொக்கிஷமாய் பாதுகாக்கின்றது
No comments:
Post a Comment