எப்போதும் என் கவிதையை
படித்துவிட்டு வாய் விட்டு
பாராட்டும் என்னவள்
இந்தமுறை
ஒன்றுமே சொல்லாமல்
தன் கண்மை தொட்டு
புள்ளிவைத்தாள்...
கண் திருஷ்டி படாமல்
காத்து நிக்கும் என்றதில்
எல்லாம் எனக்கு
நம்பிக்கையில்லை
என்றபோதிலும் அவள்
நம்பிக்கையில், என் கவிதை
மேல் உள்ள அக்கறையில் தான்
அவள் அவ்வாறு செய்தாள்
என்றெண்ணி நானும் கேளாமல்
விட்டுவிட்டேன்...
வித்தியாசமான கவிதைகளின்
தொகுப்பில் என் கவிதை
ஆயுத எழுத்து கொண்டு
கவிதை எழுதியதாய்
முதலிடம் பெற்றது ...
நான் பின்பு தான்
உணர்ந்துகொண்டேன்
எல்லா தீய எண்ணங்களில்
இருந்தும் என்னையும்
என் கவிதைகளையும் காத்து
நிற்கும் ஆயுத எழுத்தாக
இருந்தது அவள் கண்மையினாலான
புள்ளிதானென்று ....

No comments:
Post a Comment