Saturday, December 31, 2011

மறதி
















காதலிக்கும் போதும் சரி
காதலை விட்டாலும் சரி
மறதி தான் புத்தியின்
மிகப்பெரிய தொல்லை
அது சில வேளைகளில்
மறக்க வேண்டியதை
மறக்க வேண்டிய நேரத்தில்
மறக்க மறுக்கிறது
மற்றொரு சமயம்
கண்டிப்பாய் நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டியதை
மறந்துவிடுகிறது

காதலிக்கும் போது

தன் பிறந்தநாளையே மறந்தாலும்
காதலியின் அலைப்பேசி எண்ணை
மறப்பதில்லை, ஆனால்
அவள் பிறந்தநாள் அன்று
அவளை வாழ்த்தவும்
கோயில் அர்ச்சனையின் போது
அவள் ராசியையும், அவளை
சந்திக்க அவள் சொன்ன நேரத்தையும்
மறந்து தொலைக்கின்றது
இது பெரிய பூகம்பத்தையும்
ஏற்படுத்தி சிலவேளைகளில்
காதலையும் பிரிக்கின்றது

ஒரு வேளை காதலியை

பிரிய நேர்ந்தாலும் இல்லை
காதலை இழக்க நேர்ந்தாலும்
அவளது பழைய நினைவுகளை
எல்லாம் எப்படி முயன்றும்
மறக்க மறுக்கிறது

நான் கற்றுக்கொண்டது

மறதி என்ற அரக்கனிடம்
காதலை பொறுத்தவரை
ஜாக்கிரதையாய் தான்
இருக்கவேண்டும்

No comments:

Post a Comment