என் கொல்லும் மௌனம்
கவிதையை படித்துவிட்டாய்
என்று அறிந்து கொள்ள முடிகிறது,
வார்த்தைகளை நீ வீசிய போது..
தேன் கூட்டை கலைத்தது போல்
என்னமாய் ஒரு இரைச்சல்
உன் மௌனத்தை ஏன் கலைத்தேன்
என்று எனக்கு நானே
இப்போது புலம்பிக்கொண்டு
இருக்கிறேன்
அமைதிக்கு பின் புயல்
வருமென்று அறியாமல் போனேனே
என்னுடன் நீ பேசாமல் இருப்பதன்
வலிகளைத்தானே என் கவிதைகளில்
சொல்லிருந்தேன்.அதில்லென்ன
உனக்கு கோபம் பிறந்தது???
இந்த கோபமும் கூட என்னை தவிர்க்க
நீ எடுத்துக்கொண்ட காரணம் தானோ ??
உண்மையான நட்பிருந்திருந்தால்
திரும்பவும் முன்பைப்போல் இருப்பதாய்
நடித்திருக்கமாட்டாய்
உனக்கு நட்பை காட்டிலும்
நடிப்பு அதிகமாய், தெளிவாய் வருகிறது
என்பதை நிரூபித்து காட்டிவிட்டயே!!
என்னை ஒவ்வொரு முறையும்
முட்டாளாக்கி பார்ப்பதில் உனக்கென
அவ்வளவு ஆனந்தம்??
நீ முன்பைப்போலில்லை என்று
உன் வார்த்தைகளே காட்டிவிட்டதே...
மௌனத்தால் ரணமாக்கிவிட்டவள் இன்று
வார்த்தைகளால் கொல்லுகின்றாள்
இப்போது வார்த்தைகளாலும்,
என்னை பொருட்படுத்தாமல் விடுதலாலும்
மிகவும் வாதிக்கின்றாயே.
நீ, என்னை தவிர்க்க யார்யாரோ
உனக்கு நண்பனாகி விட்டதாய் எனக்கு
காட்டுகிறாய், அவர்களிடம் மட்டுமே
பேசுகிறாய்.
என்றுமே நான் அவர்களைக்காட்டிலும்
சில படிகள் மேலென்று உணராயோ ???
இன்று நன்றாய் பேசுவதற்கு கூட
அப்படி யோசிக்கிறாயே
உன் வார்த்தைகளை விட
என் மேல் நம்பிக்கையில்லாமல்
போனவளாய் என்?? எதற்கு
பேச வேண்டும் என்ற உன்
கேள்விகள் தான் மிகக்கொடுமை
நட்பின் அஸ்திவாரமே
நம்பிக்கையும் புன்னகையும் தான்
என்னில் நீ நம்பிக்கை இழந்தாய்
உன்னால் நான் புன்னகை இழந்தேன்
மொத்தத்தில் நாம் நம் நட்பை
சுத்தமாய் இழந்துவிட்டோம்
இனிமேலும் உன்னிடம்
எனக்கென பேச்சு என்றும் கூட
யோசித்துவிட்டேன்
நீ நடித்துக்கொண்டிருந்தாலும்
என்னுடையது உண்மையான
நட்பென்பதால் இன்றும் நீ
மாறிவிடுவாய் என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன் ...
என்னை தவிர்க்க நீ
என்மேல் ஆயிரம் புகார் சொல்லியும்
அதை நான் ஏற்றுக்கொண்டு
என் வருத்தங்களை சொல்லுகிறேன்
ஆனால் இது எதுவரை
நானோ என் இறுதிவரை என்
நட்பை தொடர விரும்புகிறேன்
நீயோ உன் நட்பு
இன்றே இறுதி என்கிறாய்
எல்லாவற்றிலும் பொறுத்துப்போவதால்
தான் என்னை இழிவாய் நினைத்துவிட்டாயோ
நீயும் உன் நட்பும் எனக்கு தேவை என்றே
அவ்வாறு நடந்து கொண்டேன் ஆனால் நீயோ
அதை பொருட்படுத்த மறுக்கின்றாய்
இனி கவலைகொள்ளதே
என் ஏமாளித்தனத்தை நான் உணர்ந்தேன்
நட்பே தேவையில்லை என்றபோது
உன்னை பற்றிய எண்ணம் எதற்கெனக்கு
போதுமடி!!! இதோடு போகட்டும்
என் வாழ்க்கையில் நீ படுத்திய பாடு
இனி என் வாழ்கையில் நீ
இல்லாமலும் நான் சந்தோசமாய்
இருப்பதை நீ காண்பதே
என் இதயத்தை, என் நட்பை
நீ நொறுக்கியதற்கு
உனக்கு தண்டனையாய் இருக்கட்டும்....

No comments:
Post a Comment