Sunday, December 4, 2011

கண்கள்











காதலியே ...
உன் கண்கள்
உன்னோடுனே இருப்பதால்
அது செய்யும் காரியங்களை
நீ கவனிக்காமல் விட்டிருக்கலாம் ..


சில நாட்கள் மற்றும்
அவற்றை எனக்கு இரவல் கொடு
நான் உனக்கு  நிரூபிக்கிறேன்
அது செய்யும் குற்றங்களை ...


முதலில் பார்வையை
வழிப்பறி செய்யத்துவங்கி
பின்பு என் கண்களை ஈர்த்து,
கொள்ளையடிக்க  முயன்றது
இப்போதோ என் மனதை
கிழித்து கொல்லவும் 

துணிந்து விட்டது 

தயவு செய்து
நிறுத்தச்சொல் அதன்
அட்டூழியங்களை ...

முடிந்தால்
உண்கண்களை
உன் இமை கொண்டு மூடி
வீட்டுக்காவலில் வை ...
தவறினால்
திட்டமிட்ட
கொள்ளை, கொலை
போன்ற பலவழக்குகளில்
நீ கைது செய்யப்படுவாய்... 

என்பதை மட்டும்
தெளிவாய் புரிந்துகொள்

No comments:

Post a Comment