என் வலைப்பதிவு
துவங்கிய ஒரு வருடம்
முடியப்போகிறது
நூறு கவிதைகளை
முடித்துவிடுவேனா என்ற
சந்தேகமா உங்களுக்குள்
தோன்றலாம்..
சரி ஒரு கவிஞனிடம்
கேட்டுப்பாருங்கள்
ஒரே நாளில்
ஆயிரம் கவிதைகள்
எழுதித்தரும்படி
உறைந்தே போய்விடுவான்
ஆனால் என்னால் கூடும்
அதுவும் ஒரே நொடியில் ...
இது தலைக்கனம் அல்ல
நான் என்மீது கொண்ட நம்பிக்கை
இதற்கு
காரணம் என்னவளின்
கண்களை நேருக்குநேர்
கண்டவன் நான்
அதில் மட்டுமே எத்தனை
விந்தைகள்
அது தரும் கோடி சிந்தைகள்...
அவள் கண்களை வைத்தே
அத்தனை கவிதைகள்
படைக்கமுடியுமாயின்
அவள் ஒரு சேர
என் மனதில் கொண்டவன்
நான் ...
இந்த உலகில் வாழ்ந்த
வாழ்ந்துகொண்டிருகின்ற
இனி வாழும் கவிஞர்
எல்லோருக்கும் சேர்த்து
கவிதை மழை பொழிவேன்
No comments:
Post a Comment