Friday, December 30, 2011

மொழி
















எனக்கு கவிதை எழுத
கற்றுத்தந்த தேவதையே
அதை உன் மொழியிலையே
எழுத சொல்லித்தந்திருக்க கூடாதா
காரணம்
காதலை கற்பித்ததோடன்றி
என் திறமையை வெளிக்காட்ட
என்னைக் கவிஞன் ஆக்கி
எனக்காய் என் தாய்மொழியை
கற்றுக்கொண்டு, என் கவிதைகளை
படித்து ரசிக்கின்றாய் ...
என் கவிதைகளின் முதல் வாசகியாய்
விமர்ச்கியாய் மாறிப்போனாய்
என்னை விட என் கவிதைகளின் மேல்
நீ அதிக பிரியம் கொண்டாய்
என்னை மட்டுமல்ல எனக்காய்
என்னைச் சேர்ந்தவற்றையும்
எனக்கு பிடித்தவைகளையும்
கூட ஏற்றுக்கொண்டாய்
இப்படி நீ எனக்காய் செய்தது பல

உனக்காய் நான் என்ன செய்தேன்

நான் எழுதிய பல கவிதைகளும்
உன்னைப்பற்றியது  தான் என்று
மற்றவர் சொல்லலாம்
அனால் அது போதாது பெண்ணே

என் ஏக்கத்தை நிறைவு செய்ய

எனக்குள் ஒரு ஆசை
நீ பிறந்தது முதல் உன் அழகிய
இதழ்களில் விளையாடிய உன்
மொழியில் உன்னை பற்றிய
கவிதை ஒன்று இயற்றிட வேண்டும்
அதை நீ வாசித்திட வேண்டும்
படித்து வியந்திட வேண்டும் 

மொத்தத்தில் உன் மொழி பேசியே 
நம் காதல் வளர்ந்திடவேண்டும்
என் ஆசை நிறைவேற

காலத்தை வேண்டி நிற்கிறேன்

No comments:

Post a Comment