Wednesday, December 28, 2011

எழுத்துக்கள்













ஹைக்கூ  கவிதைகளை 
விரும்பி படிப்பவன் நான்
கொஞ்சம் எழுத்துக்களில்
கொஞ்சம் வார்த்தைகளில்  
அதிகமாய் அர்த்தம் தருவாதால்  
அதில்,எனக்கொரு நாட்டம்  
என்னவளை எனக்காய் பெறும் வரை 
இக்கவிதைகளை எழுதவும் செய்தேன்   

ஆனால் இன்றோ,
என் எண்ணங்களில் நிறைந்து 
என் எழுத்துக்களில்  அவளே   
வழிந்தோடுவதால்  
என்னுடைய சிந்தனைகளும்,
என்னுடைய எழுத்துக்களும்,
அதன் கோர்வையாய் கவிதையின் 
சொற்களும் அதிகரிக்க தொடங்கிவிட்டது ...

ஒருவேளை நான் எழுதும்
ஒவ்வொரு  எழுத்துக்களும்
நான் அவள் மீது கொடிருக்கும் அன்போ ??
இரண்டே வரிகளில் எழுதியவன்
இன்றோ, இரண்டாயிரம் வரிகள்
எழுதித்தள்ளுகிறேனே...

பொழுதுபோக்காய் நான் எழுதும்
ஹைக்கூ கவிதையைக் கூட மாற்றி
காதல் கவிதை எழுதவைத்தவளே
அதன் பிரதிபலனாய் தான்
அந்தக்கவிதைகளிலும் என் கவிதையாகிய 
உன்  பெயரே அதிகமாய்  
இடம்பெறச்செய்கிறேனோ  ??

No comments:

Post a Comment