வெள்ளைத்தாள்
நானும் கூட
ஒரு வெள்ளைத்தாள்
போல் தான்
எனக்கென்று திசையின்றி
காற்றடிக்கும் பக்கம்
பறந்துகொண்டிருந்தேன்
எல்லாம் அவள் வரும் வரை தான்
எப்போதவள் என்னில்
காதல் கவிதை எழுதி
என்னை கனமாக்கிவிட்டளோ,
அன்று முதல் அவள்
மூச்சுக்காற்றுக்கு மட்டுமே
அசைந்தாடும் பக்கமாகிவிட்டேன்
அவளின் நாட்குறிப்பில்
நிரந்தரமாய்....
No comments:
Post a Comment