Wednesday, December 28, 2011

பிச்சைக்காரன்













பல தெருக்களில் அலைந்து
கஷ்டப்பட்டு
தனக்கு பிச்சையாய் கிடைத்த
சிறு உணவையும் 
அருகிலிருக்கும் நாய்க்கும்
பகிர்ந்தளித்து உண்ணும்
வள்ளலாம் தன் தந்தையை
வீட்டில் வைத்து
உணவளிக்க முடியாத மகன்

தருமம் தலை காக்கும்

என்பதையரியா மூடனவன்
ஒருவேளை
எல்லா பொருள்களையும்
இவ்வாறே தானமாய்
தந்துவிடுவார் என்ற பயத்தினால் 

வீட்டிலிருந்து விரட்டியடித்தானோ??
 

இப்போதொரு சந்தேகம்
யார் பிச்சைக்காரன் ??
பொதுவுடைமை எண்ணம் கொண்ட
தந்தையா?? 
தனக்கு மட்டுமே வாழும்
சுயநலம் கொண்ட தமையனா??

No comments:

Post a Comment