மனதுக்கும் புத்திக்கும்
ஓர் வாக்குவாதம்
உன்னை தான் அவள்
பிரிந்து சென்றாளே,
மறந்தும் விட்டாளே
நீயும் அவளை மறந்துவிடு
என்றது புத்தி
எனக்காய் பிறந்தவள் அவளே
மனதில் நிறைந்தவள் அவளை
எப்படி மறக்க முடியும் ??
என்றது நெஞ்சம்
எதன் பேச்சை கேட்பது
ஒரு காலத்தில் அவளுக்காய்
யோசித்து கவிதைகளாய்
கொட்டியது புத்தி தான்
மனமோ அவளை வேண்டாமென்றது
அவள் என்னை விட்டு
விலகிச்சென்றதால் இவை இரண்டும் அதன்
கருத்துக்களை மாற்றிக்கொண்டது
நான் இப்போது எதன் பக்கம் பேச
மதில் மேல் பூனையாய் நான்
செய்வதறியாது நிற்கிறேன்...
இதற்கு காரணம் என்னவளின் பிரிவு
புத்தியே, மனமே
அவள் பிரிந்து சென்றுவிட்டாள்
என்பது நிதர்சனமான உண்மை
இனி நீங்கள் சண்டையிட்டு
பிரயோஜனம் இல்லை
அவள் இல்லாத நாட்களிலாவது
சுயமாய் என்னை நடக்கவிடுங்கள்
என் எதிர்காலத்தயாவது
நல்ல படியாய் அமைத்துக்கொள்கிறேன்
கடந்த கால வாழ்கையின் நினைவுகளுடன்

No comments:
Post a Comment