மனிதா
என் சாயலிலே
உன்னை படைத்தேன்
பதிலுக்கு நீ
தினம் ஒரு உருவத்தில்
எனை
படைத்துக்கொண்டிருக்கிறாய் ...
எல்லோர்க்கும் பொதுவாய்
மனிதன் என்று பெயரிட்டேன்
ஆனால் நீயோ வெவ்வேறு
பெயரில் எனை அழைக்கின்றாய்...
எல்லாப் பெயரும் எனை குறித்தாலும்
நீ வைத்தது தான் சிறந்ததென்கின்றாய்...
என் வழியில் நீ
நடந்த காலம் போய்
உன் வழியில் எனை இழுக்கின்றாய் ...
உன் விதியை எழுதிட்ட
எனக்கே நான் பின்பற்ற
விதிசெய்கிறாய்...
எத்தனை பேர் வந்தாலும் அதில்
உன்னையும்
உன் ஆதி முதல் அந்தம் வரை
நானறிவேன் அனால்
உண்கண்முனே நான் வரினும் எனை
நீ அறிவாயோ??
நீ நம்புவாயோ??
மாயவித்தை செய்து நிரூபிக்க
நான் என்ன மாயாவியோ ??
குற்றங்கள் நீ செய்து
எல்லாம் அவன் செயல்
என்னை குற்றப்படுத்துகிறாய்
பாவங்களை செய்துவிட்டு
அதன் விமோசனங்களை
என்னை கேட்கின்றாய்
துன்பம் வரும் போது மட்டும்
நீ எனை நினைக்க
சந்தோசமாய் இருக்கும் போது
மட்டும் நான் உனக்கு
உதவட்டுமா??
நல்லவேளை என்னிடம் உன்னை
படைத்தற்கு காப்புரிமை
இல்லாததை பயன்படுத்தி
உன் படைத்தல் தொழிலை
ஆரம்பிக்காமல் இருக்கிறாய் ...
நன்றி என்பது
நாய்க்கு மட்டும்தானென்று
நினைத்து விட்டாய் போலும்
நான் படைத்த எல்லா
ஜீவன்களிலும் நீ
கற்றுக்கொள்ள வேண்டிய
விஷயங்கள் பல இருக்க,
உன்னை படைத்தது தான்
நான் செய்த
மிகப்பெரிய தவறென்று
கற்றுகொண்டேன் உன்னிடம்
இப்போது எனக்கும் கூட
கடவுள் இல்லை என்போருடன்
சேர்ந்து விட தோன்றுகிறது
காரணம் அவர்களாவது
"கடவுள் ஒருவேளை இருந்தால்"
என்ற பயத்துடன்
மனிதனாய் நடந்து கொள்கிறார்கள்

No comments:
Post a Comment