பிறவிக்கலைஞன் இல்லை
பரம்பரைக்கவிஞன் இல்லை
ஆயினும்
எதை பற்றியும் யோசிக்காமல்
கைக்கு வந்ததை
கிறுக்கிக்கொண்டிருக்காமல்
எனக்கு சரியெனப்பட்டதை தான்
எழுதிக்கொண்டு இருக்கிறேன்..
இது ரசிக்கும்படி இல்லாமல் போகலாம்
கண்டிப்பாய்
வெறுக்கும் படி இருக்காது
காரணம்
நான் ஒவ்வொரு முறை
எழுதும் போதும்
எழுதும் போதும்
என்னக்குள்ளும் ஒருகுரல்
எச்சரித்துக்கொண்டே இருக்கிறது
முடிவில் ஆச்சரியக்குறியிட்டு
எழுதவதெல்லாம் கவிதையாகாது
தொடக்கத்திலிருந்து ஆச்சரியப்படும்படி
எழுதுவதே "கவிதை" என்று...
என் எழுத்துக்கள்
அதை செய்யும்
என்பதால்
நான் எழுதுவதும்
கவிதை தான்
என்று நம்புகிறேன் ...
அதை செய்யும்
என்பதால்
நான் எழுதுவதும்
கவிதை தான்
என்று நம்புகிறேன் ...
No comments:
Post a Comment