இரு தண்டவாளத்தின்
இடையே அழகாய்
பயணிக்கும்
தொடர்வண்டியாய்
இரு இமைகளுக்குள்ளேயே
பயணிக்கும் அவள் கருவிழிப்
பார்வையின் சேருமிடம்
நானாக இருக்க வேண்டுகிறேன்
ஐயோ மறந்தே விட்டேன்
எந்த தண்டவளாமும்
இணைவதில்லையே பின்
எப்படி நாணத்தால்
அவள் கண்சிமிட்டும்போது
மட்டும் அவள் இமைகள்
பிரிந்து பின்பு சேர்கின்றது
ஒருவேளை
எதோ ஒரு சூலில் நீங்கள்
இருவரும் பிரியநேரிட்டாலும்
பின்பு எப்படியும்
சேர்ந்துவிடுவீர்கள் என்று
எங்களுக்கு
நம்பிக்கைதரத்தான் இந்த
செயல் நடைபெறுகிறதோ ?
No comments:
Post a Comment