Friday, December 30, 2011

காந்தவியல்











பெண்ணே
காந்தவியல் கொள்கை
கொண்டவள் நீயோ 
குழந்தையின் சிரிப்பு
வைரமுத்துவின் கவிதைகள் ,
வெறிச்சோடிய கடற்கரை ,
மேகமில்லா வானம் ,
முழு நிலவு இப்படி
எனக்கு பிடித்த எல்லாமே
உனக்
கும் பிடித்திருந்தும் கூட
என்னை பிடிக்கவில்லை என்று
உதறித் தள்ளினாய் 


மறுபுறம் உன் அழகிய பார்வையினால்
உன் உதவும் எண்ணங்களால்
என்னை ஈர்க்கின்றாய் 


நான் என்ன தான் செய்ய இப்போது
துரத்துவதால் ஒதுங்கிவிடவா??
ஈர்ப்பதால்  ஒட்டிக்கொள்வதா??
நீ தான் எனக்கு புரியும்படி
தெளிவுபடுத்த வேண்டும்...

எனக்காக செய்வாயா??

No comments:

Post a Comment