Monday, May 28, 2012

முதல் பார்வை










முதல் விபத்திலே 
மரணம் நம்புமுடியுமானால் 
முதல் பார்வையில் 
காதலும் 
சாத்தியம் தான் 

அவள்

















பலநாட்கள் யோசித்து 
பல மொழிகளில்  
பலவரிகளில் கவிதை 
எல்லாம் எழுத தெரியாது 
எனக்கு,
ஒரு நொடியும் யோசிக்காமல் 
ஒரே மொழியில், ஒரே  வரியில் 
சொல்ல வேண்டுமானால் 

அவள் அழகு 
அவள் தான் அழகு 
அவள் மட்டும் தான் அழகு 

Thursday, May 24, 2012

வழி பார்த்து


 














பெண்ணே
வலி தந்து போனாயே
இதற்காகவா
நீ வரும்
வழி பார்த்து ராப்பகலாய் 

விழி நோக  காத்திருந்தேன்??

காத்திருத்தல்


 














காதலில் காத்திருத்தல்
எவ்வளவு சுகமானது
அவளுக்கு புரிய வைக்க
அவளை சந்திக்க போகும்
போதெல்லாம் வேண்டுமென்றே
தாமதமாய் சென்றேன்

காதலில் காத்திருத்தல்

எவ்வளவு ரணமானது
எவ்வளவு வலி தருவது
உணர்த்திவிட்டாள் எனக்கு
நான் வேண்டாமென்று
என்னை நிரந்தரமாய்

விட்டுச்சென்றாள் ......

தண்டனை













பாவத்தின் சம்பளம் தான்
மரணமா?,
துரோகத்தின் தண்டனையும்
மரணம் தான்

அந்நாளில்

காதல் எனும் உன்னை என்
மனதுக்கு அறிமுகப்படுத்தி
எனக்கு நானே செய்து கொண்ட
துரோகத்தின் தண்டனைக்காய்
காத்திருக்கிறேன்

உலக அதிசயம்
















பழைய உலக அதிசயங்கள்  
படித்தும், பார்த்தும்
சலித்துப் போனதாம்
புதிய உலக அதிசயங்களுக்காண
தேடல்கள் துவங்கிவிட்டது

என்னவளே நீ

வெளியே தலை காட்டி விடாதே
எதிர்ப்பின்றி நீ வென்றிடுவாய்
முதல் உலக அதிசயமாய்

காரணம்

மனிதன் படைத்தவற்றின்
நடுவே கடவுளாலேயே

படைக்கப்பட்டு மண்ணில் வாழும் 
முதல் அதிசயம் நீ 
முதல் அழகியும் நீ

தனிமை
















அவள் எனக்காய்
விட்டுச்சென்ற
அமானுஷ்ய தனிமை
அமைதியாய்
அணுஅணுவாய்
அநியாயமாய் என்னை
கொல்கிறது... 


மீள வழியின்றி
சாக துணிகிறேன்....

இதயம்












நான் எதையோ தொலைத்தவனாய்
சோகமாய் உட்கார்ந்திருக்க 


அப்பா சொன்னார்  "பொறுப்பற்றவன்
எதையோ தொலைத்து விட்டான்" என்று
அம்மா சொன்னாள் "சொன்னால்
நாங்களாவது  தேடித்தருவோம்" என்று
தங்கை சொன்னாள்
"நான் எடுக்கவே இல்லை" என்று
தம்பியோ "நல்லா வேண்டும்" என்றான்

அவர்களிடம் நான் எப்படி சொல்வேன்

நான் தொலைத்தது என்
விலைமதிப்பில்லா இதயத்தை என்று   

எழுதப்படாத பக்கங்கள்












நாட்குறிப்பில் அன்றன்றைய
நிகழ்வுகள் எழுதப்படுவது
நிறுத்தப்படலாம்
இரண்டே காரணங்களால்
ஒன்று மறந்துபோவதால்
இரண்டு இறந்துபோவதால்

என்னை அவள்

என்று மறந்துபோனாளோ
அன்றே நான்
இறந்துபோனதால்
என் நாட்குறிப்பின்
பக்கங்கள் எழுதப்படாமலே
கிடக்கின்றது

Tuesday, May 22, 2012

கைரேகை















ஒருவேளை
நான் விரும்பும் என்
தேவதை மட்டும் என்
வாழ்க்கைத்துணையாய்
கிடைத்துவிட்டால் போதும்
கண்டபடி சிக்கலில்
சிக்கித்தவிக்கும் என்
கைரேகை கோடுகளும் நேராகும்
என் வாழ்க்கையும் கூட
சீராகும்

தேர்வு
















நான் மட்டும் தேர்வறையில்
ஒன்றும் எழுதாமலே
உட்கார்ந்திருந்தேன்...
நேற்று சுமாராய் படித்ததை
ஞாபகப்படுத்த முயற்சிக்க
நினைவிற்கு வந்ததெல்லாம்
தேவதையாம் அவள் நினைவு

கடைசி சில மணி நேரமென

கண்காணிப்பாளர் கண்டிக்க
கேட்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் 

அவள் பெயரை எழுதி
வைத்துவிட்டு வீடு திரும்பினேன்

காரணம்,
எனக்கு தெரிந்த
ஒரே பதில் நீ தான்,
நீ மட்டும் தான்.....

Monday, May 21, 2012

பயணிப்போமா ???
















அழகே !!!
உன் கை பிடித்து 
தொடங்கும் பயணம் 
வெகு தொலைவையும் 
எளிதில் கடக்கும்  
ஏன் நொடி நேரத்தில் 
நம்மை 
நிலவிலும்  சேர்க்கும் 

இனி நம்  
வாழ்கையில் கை கோர்த்து 
ஒன்றாய் பயணிப்போமா ???

பயணச்சீட்டு


 














நடத்துனர் கிழித்துதந்த
பயணச்சீட்டையெல்லாம்
ஒட்டவைத்து சேகரிக்க
துவங்கினேன் 


பேருந்தில்
உன்னோடு பயணித்த
சிலமணிநேரம் கூட
என் வாழ்நாளில்
மறந்து விடக்கூடாது
என்பதற்காக .....

இப்போது  உன்

ஞாபக சின்னங்களாய்
நான் சேர்த்தவைகளில்
என் அறை முழுவதும் 
பயணச்சீட்டே அதிகமாய்
நிறைந்து கிடக்கிறது

திரும்பிவிடாதே
















ஏய் !! பெண்ணே
தயவு செய்து திரும்பிவிடாதே
ஒருவேளை நேருக்குநேராய்
உன் அழகு முகம் கண்டால்
என்  மனதில் பதிந்திருந்த
இருபத்தியைந்து ஆண்டு கால
நினைவுகளும் அழிந்து
உன் நினைவாய் நிரம்பிவிடும்
நிரந்திரமாய்