அன்றைக்கு ஏனோ
அத்தனை தும்மல்கள்
வந்து என்னை தடுமாற
வைத்துவிட்டது
நண்பன் நக்கலாய் கேட்டான்
"யார் அவள் நாள்
முழுவதும் உன்னை
நினைத்துக்கொண்டிருப்பது?"
என்று கேட்ட மாத்திரத்தில்
உன் ஞாபகம் ஒரு நொடி என்
நினைவில் வந்து சென்றது
இருப்பினும்
இது முட்டாள் தனமான
நம்பிக்கை என்று
எண்ணிக்கொண்டு
என் வேலைகளை தொடர்ந்தேன்
பிறகொரு நாள்
மனிதஉடல் சார்ந்த புத்தகம்
படித்த போதுதான் அறிந்துகொண்டேன்
ஒவ்வொரு முறை தும்மும் போதும்
இதயம் ஒரு முறை நின்று
துடிக்கிறதாமே
என் நண்பன் சொன்னது
நினைவுக்கு வந்தது
என் இதயத்தை இயக்கவைப்பதும்
நிருத்திவைப்பதும் அவள்
செய்கையாலன்றி யாரால் கூடும்
இன்னொன்றும் தோன்றியது
தும்மல் ஆயுளோடு
சம்பந்தப்படிருப்பதால் தான்
தும்மலின் போதெல்லாம்
"நூறு ஆயுசு" என்கின்றோம்
ஒரு வேளை பூமியுள்ளவரை
நான் வாழ எனக்காய்
என்னை நினைத்துக்கொண்டே
இருக்கிறாளோ ??
என்னவள்...
No comments:
Post a Comment