நீ என்னை முழுவதுமாய்
விட்டு விலகிச்சென்றிருக்கலாம்
அது ஏனடி உன் நினைவுகளை
காற்றில் பரவவிட்டு சென்றாய்
எனக்கு விருப்பம்
இல்லாமல் இருந்தும் கூட
உன் நினைவுகளை தான்
அனுதினமும் நான்
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும் எனக்குள்
என் சுவாசமாய் நீ வாழ்கிறாய்
இறக்கவும் கூட முடியாமல்
உன் நினைவுகளுடன்
இன்னமும் நானும் கூட
வாழ்கிறேன்
உன் நினைவுகளால்
மட்டுமே தான் வாழ்கிறேன்

No comments:
Post a Comment