Thursday, September 20, 2012

கடற்கரை











 
பெண்ணே 
மாலை மங்கும் நேரம் 
கடற்கரை காண நாம் 
போக வேண்டாம் 
என்றேனே கேட்டாயா??

இப்போது பார்
கலங்கரை விளக்கமென்று 
கப்பல்கள் நாம் இருக்கும் 
கரைக்கு விரைகிறது 

உன் கால் நனைத்த அலைகள் 
திரும்ப கடலுக்கு செல்ல 
மறுக்கின்றது 

அந்த சூரியனும் கூட 
உன்னை கண்டு விட்ட 
மறைய மனதில்லாமல் 
அடம் பிடித்து நிற்கின்றது 

நானோ 
இவையெல்லாம் எப்போது
பழைய நிலைமைக்கு செல்லும் 
என்று காத்து நிற்கிறேன்

அது ஏனோ 
உன்னைக்கண்டால் மட்டும் 
எதுவுமே மாறிவிடுகிறது 
இயற்கையும் கூட குழம்பி 
விடுகிறது  

இயற்கைக்கும், 
மற்றவைகளுக்கும் 
இது புதிதாய் தெரியலாம் 
ஆனால் எனக்கோ உன் அழகால் 
ஏற்ப்படும் மாற்றமும், குழப்பமும் 
பழக்கப்பட்ட வாடிக்கை 
வாடிக்கையாகிவிட்ட  பழக்கம் 

No comments:

Post a Comment