நீயும் நானும்
பேசிக்கொண்டிருக்கையில்
நேரம் போவதே
தெரிவதில்லை என்று
எனக்கு நானே
நினைத்திருக்கிறேன்
ஆனால்
எத்தனையோ யுகங்களும்
கூட கடந்து போயிருக்கிறது
நம் பேச்சு என்பது
"சரி நான் போகட்டுமா??
நேரம் ஆச்சு ?" என்று
நீ சொல்லிவிட்டு
புறப்படுகிற போது தான்
அதை உணர்ந்துகொள்கிறேன்
இன்னமும் கூட
இதுபோல் பல யுகங்களை
நம்மை அறியாமலே நாம்
கடக்க விரும்புகிறேன்
அனுதினமும்.....

No comments:
Post a Comment