போடி உனக்கு மழை
எவ்வளவோ பரவாயில்லை
மழை எதிர்பாரா நேரத்தில்
சிறு சாரலாகவாவது வந்து
வறண்டு கிடக்கும் நிலத்தை
நனைத்துவிட்டு செல்கிறது
ஆனால் நீயோ
பல நாட்களாய் உன் காதலை
எதிர்பார்த்து இருண்டு போன
என் கனவுகளுக்கு
புன்னகை எனும் ஒளியேற்றி
வறண்டு போன வாழ்க்கைக்கு
சிறு தூறலாய் நீரூற்றி செல்ல
இன்னமும் மறந்து கொண்டே
மறுத்துக் கொண்டே இருக்கிறாய்

No comments:
Post a Comment