அரசனொருவன் தான்
இறக்கும்போது சொன்னானாம்
"இறந்த மனிதன் எதையும்
எடுத்துக்கொண்டும் போவதில்லை
கொடுத்துவிட்டும் செல்வதில்லை
என்று
எனக்கோ இதில் சிறு மாறுபாடு
இறந்து போகும் மனிதன்
தன உறவுகளுக்கு விலை
மதிப்பற்ற நினைவுகளை
தந்துவிட்டு
உறவுகளின் கலப்படமற்ற
கண்ணீரையும், மாசற்ற
அன்பையும் எடுத்துக்கொண்டு
தான் செல்கிறான்..
ஒருவேளை அவன் எடுத்து
சென்றது தான் சொர்கத்தின்
திறவுகோளோ??
இறந்தவன் சொர்கத்தை தான்
அடைந்தானோ தெரியாது
நாம் அவனை அங்கு
சந்திக்கும் வரை
கண்டிப்பாய்
பிரிந்து சென்றவர்கள்
நமக்காய் விட்டுச்சென்ற
நினைவுகளை உயிராய்
காப்பவன் அவர்களை
பிரிவதுமில்லை
சொர்கத்தை பூமிலேயே
பெறுவதால் அது
தன இறப்பின் போது
கிடைக்க வேண்டுமென
சிந்திப்பதுமில்லை

No comments:
Post a Comment