Thursday, September 6, 2012

காதலுடன்...
















நான் எனது நாட்குறிப்பிலும் கூட 
முன் பக்கத்தில் மட்டும்
என் பெயரை எழுதிவிட்டு 
எல்லா பக்கங்களிலும் 
உன் பெயரை நிறைத்தேன் 

ஆனால் நீயோ 
உன் பெயரின் கடைசியில் 
என் பேரை சேர்க்க 
இவ்வளவாய் யோசிக்கிறாயே??

என் எண்ணமெல்லாம் உன்னை 
மட்டுமே நிறைத்திருந்தேன் 
ஆனால் இன்றளவும் நீ 
என்னை உன் கண்ணளவில் 
நிறுத்திவிட்டு மனமிறங்க 
மறுக்கிறாயே??

இது உனக்கே  நியாயமாகுமோ??

ஒன்று மட்டும் உண்மையடி 
நம்மிருவரில் காதலை தூக்கி
சுமப்பதிலும் கண்போல் 
காப்பதிலும் உன்னை விடவும்
நானே சிறந்தவன் 
இதற்காகவாது  என்னை 
நேசிப்பாயா ??

காத்திருக்கிறேன் காதலுடன்...

No comments:

Post a Comment