தேவதைகளில் ஆண் பாலினம்
இருக்கிறதா என்று நானறியேன்
சத்தியமாய் இருந்துவிட கூடாது
என்பது தான் என் ஒரே எண்ணம்
காரணம், என்னவளை போன்ற
தேவதைகளின் இளவரசிக்கு
அதே இனத்தில் திருமண
வரன் தேடுவார்களேயானால்
என் பாடு திண்டாட்டம் தான்
சுயம்வர போட்டியில் கூட பங்கேற்க
முடியாமலும், அவள் கிடைக்காமலும்
வெளியில் தள்ளிவிடப்படுவேன்
பெரும் ஏமாற்றத்துடன்....
அதற்கு பின், என் காலத்தின் மீதி
நாட்களை அவள் நினைவுகளுடனும்
அவளை இழந்துவிட்ட சோகத்துடனும்
தான் கழிக்க வேண்டும் தனிமையில்

No comments:
Post a Comment