Tuesday, September 25, 2012

காலடி
















உண்மையோ பொய்யோ
எனக்கு தெரியாது
பலர் சொல்லுவார்கள்
சில நதிகளில் நீராடினால்
இறந்த பின்பு சொர்கமாம்

ஆனால் எனக்கு தெரிந்ததோ
தண்ணீரில் உன் காலாடினால்
அந்த நதிக்கும்,
அதில் நீந்தும் மீனுக்கும்
கூட மோட்சம் 

பின்னொரு நாளில்
நீ வந்து கால் நனைக்க
அவைகள் பூமியிலேயே
மோட்சம் பெறுவதற்காக
தானோ நம் முன்னோர்கள்
அந்நாளிலேயே நீர்நிலை
கண்டால் கால்நனைக்க
சொன்னார்கள்??

இருக்கலாம்
நீருக்கும் மீனுக்கும்
மோட்சம் தரும் உன் காலடி
அதை நெஞ்சில் சுமக்கும்
உன்னவனுக்கு என்னதான்
தரப்போகிறது எதுவென்றாலும்
நீ தருவதால் ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவத்துடன் நான்
வெறும் ஏமாற்றமும்,
வேதனையாகவும் இருந்தாலும்...

No comments:

Post a Comment