ஏழு தான் உனக்கு பிடிக்காத
எண்ணோ??
ஒரு வாரத்தில்
உன்னைப்பார்க்கும் நாட்கள்
மட்டும் கணக்கில் கொண்டால்
ஒரு வாரத்திலும் எனக்கு
ஏழு நாட்களில்லை
உலகில் ஒருவரை போலவே
ஏழு பேர் இருப்பார்களாம்
உன் விஷயத்தில் இது
பொய் தானென்பேன்
நீ ஒருவளே
அந்த ஏழு பேரின்
அழகையும், அறிவையும்
உள்ளடக்கி பிறந்தாயே
பின்பு அவர்களுக்கு
என்ன மிச்சம்
இருக்கப்போகிறது??
இந்த உலகில்
உன்னை போன்று
நீ ஒருவளே
இருப்பதால், உலக
அதிசயங்களும் கூட
இனி ஏழல்ல
உன்னையும் சேர்த்து
அது இப்போது எட்டு
துரதிர்ஷ்டவசமாக
என் பிறந்தாநாளும்
எழாம் மாதத்தில்
எழாம் நாள்

No comments:
Post a Comment