நான் சுமாராய்
கவிதை எழுதுவேனென்று
என தெரிந்து கொண்ட
நண்பனுக்கு
"இதயம்" பற்றிய கவிதை
ஒன்று வேண்டுமாம்
எங்கே போவேன்
என் இதயம் பத்திரமாய்
என்னவளிடம் இருக்கும்
போது, என்னைவிடவும்
மிகுந்த அக்கறையுடன்
அவள் அதை
பார்த்துக்கொள்ளும் போது,
தன் உயிராய் அதை
அவள் நேசித்து
பாதுகாக்கும் போது
அவளிடம் ஒப்படைத்து
விட்ட பிறகு எனக்கே
அதில் உரிமை இல்லை
என்ற போது
என்னிடம் இல்லாத ஒன்றை
பற்றி நான் எப்படி சிந்திக்க ??
இல்லை அதை பற்றி
என் கவிதையில் எப்படி
வர்ணிக்க ??
மன்னித்து விடு தோழா
இதயம் அவளிடமும்,
அதன் துடிப்பு அவளாகவும்
இருப்பதால்
முதல் முறையாய் நட்புடன்
நம்பிக்கையுடன் நீ கேட்டதை
செய்து தர மறுக்கிறேன்

No comments:
Post a Comment