தோழியே, என் வாழ்வில்
உன் வருகையும், பிரிவும்
சில இல்லை பல
மாற்றங்கள் உண்டு
பண்ணியது என்னவோ
உண்மைதான்
நீ கற்றுதந்ததும்
எனக்கு பெற்றுத்தந்ததும்
என் நினைவில்
பத்திரமாய் இருக்கிறது
ஆனாலும் ஒருவரை
உண்மையாய் நேசிப்பதை
கற்று தந்த விதத்தில் உன்
பங்கோ ஒன்றுமே இல்லை
பிறப்பிலயே என்னுடன்
பிறந்ததிந்த நேசம், ஆம்
பிறந்த நொடியிலிருந்தே
தாயை நேசித்தேனே
அவள் மட்டும் என்ன??
என்னை சுமக்கும் போதே
நேசிக்க ஆரம்பித்துவிட்டாள்
அவளிடம் கற்ற இந்த பாடம்
சாகும் பொழுதிலும் மறக்காது
இதை அறியாமலே,
என் நேசத்தை உரிமை
கொண்டாடுகிறாய், இதை
நீ தான் கற்றுத்தந்ததாய்
சொல்லிக்கொள்கிறாய்
உன்னை மறக்கும் படி
கட்டளையிடுகிறாய்
உண்மையான நேசம்
இல்லாதவளே, அது என்ன
என்பது கூட அறியாதவளே
அதை நீ ஏற்றுக்கொள்ள
போவதும் இல்லை
உன் மேல் நான் கொண்ட
நேசம் தான் என்றாலும்
நீயே சொன்னாலும்
அதை மாற்றிக்கொள்வதாய்
இல்லை என்றும்
என்றென்றும்

No comments:
Post a Comment