Wednesday, November 27, 2013

அழகி












பெரும்பாலும் நிலவுடனே
தங்கள் காதலியை
ஒப்பிடும் உலக காதலர்களே
சில கவிஞர்களே,
நீங்கள் என்னவளை
பார்த்ததில்லை அதனால்
தான் உங்களுக்கு
தோன்றவில்லை

அந்த நிலவை காட்டிலுமே
அழகிய ஒன்று அந்த வானில்
அல்ல நம் பூமியிலேயே 
உள்ளது என்று

அவளை கண்டால் நான்
சொல்லவதை அவர்கள்
மறுக்கப்போவதில்லை
ஆனால் அவர்களுக்கு இது
தெரியபோவதே இல்லை

அவர்கள் அந்த நிலவையே
புகழ்த்து தள்ளட்டும்
நான் அதை விட
அழகிய என்னவளுடன்
வாழ்ந்து கொள்கிறேன்

என்னவளை புகழ்ந்து எழுதி
ஒரு கவிஞனாய்
அவளுடன் வாழ்ந்து ஒரு
காதலனாய் 

No comments:

Post a Comment