
முயன்றால் முடியாதது
எதுவும் இல்லையாம்
இவ்வுலகில்
இந்த வரிகள் வார்த்தைக்கு
மட்டும் தான் சாத்தியமோ??
என்னை மிகவும் பிடித்தும்
அதை ஏற்க மறுக்கும்
என்னவளின் வீண் பிடிவாதத்தை
வேறு யாரோ அல்ல அவளே
முயன்றும் மாற்றிக்கொள்ள
முடியவில்லை
தன்னால் தன் பிடிவாதத்தை
மாற்ற முடியாது என என்னவள்
முயற்சிப்பதேயில்லை,
ஆனால் நானோ என்
முயற்சியை என்றுமே கை
விடுவதாயும் இல்லை
என்னை ஏற்க மறுக்கும்,
என்னை மறக்க நினைக்கும்
அவள் பிடிவாதத்தை மாற்ற
முயன்றே பார்த்து விடுகிறேன்
இவ்வுலகின் கடைசி எல்லை
இவ்வுலகின் கடைசி நொடி
வரை போராடி சென்றாவது
எனக்கு தேவையெல்லாம்
என்னை பிடிக்குமென்று
இதழோரப் புன்னகையுடன்
மௌனமாய் ஒரு சம்மதம்
என் காதலுக்கு..
No comments:
Post a Comment