Monday, November 25, 2013

தனிமை













நான் ஓர் தனிமை விரும்பி

தனிமையை ரசித்தேன்

தனிமையை நேசித்தேன்
தனிமயிலேயே வசித்தேன்
நீ என் வாழ்வில் வரும்வரை

உன்னால் 
எனக்கும் என் தனிமைக்கும்
மத்தியில் சிறு விரிசல்
முதலில் அதை மறந்து போனேன்
சிலநாளில் என் தனிமையை
முழுவதுமாய் இழந்தே போனேன்

அது ஏனோ காதல் ஒன்றை
இழக்க செய்தே தன்னை அணைக்க 
செய்கிறது. பெரும்பாலும் அது
நட்பாய் தான் இருக்கிறது
என் வாழ்விலோ நான் நேசித்த
தனிமையாய் அமைந்தது 

காலப்போக்கில் உனக்கும்
எனக்கும் சிறு ஊடல் வந்திட 
நேரம் பாத்திருந்த தனிமை
இப்போது ஆகிவிட்டது
உன் உடமை

என்னை உன்னிடம் பேசவும்
திரும்பவும் நாம் சேர
என்னமாய் தடுக்கிறது

நான் உன் காதலை பெற
என் தனிமையை இழந்தேன்
நீயோ என்னை மறக்க
என்னை தவிர்க்க தனிமை
நாடுகிறாய், உபயோக்கிறாய் 

உண்மையாய் நேசித்ததும் கூட
சில வஞ்சிக்கும் என்பதற்கு
நீயும், என் தனிமையுமே
சிறந்த எடுத்துகாட்டு

இப்போது காத்திருக்க
முடிவெடுத்திருக்கிறேன் 

எது முதலில் எனக்கு திரும்ப
கிடைக்கிறதோ அதை
எற்றுக்கொள்ள போகிறேன்
முழு மனதுடன்

அது  நீ ஆனாலும் சரி 
அல்லது என்
தனிமையானாலும் சரி  

No comments:

Post a Comment