இந்த உலகத்திற்கு
சூரியன் உதித்தால் தான்
நாளை விடியல்
எனக்கோ என்னவளே
உன்னை நினைத்தால்
மட்டுமே ஒவ்வொரு
நாளும் விடியல்
எது எப்படியோ, எந்த
தடையுமின்றி சூரியன்
தினமும் உதிக்கும் தான்
ஆனால் எனக்கோ ஆயிரம்
தடைவரினும்
உன் நினைவுகளே இனிக்கும்
என் வாழ்க்கையும் அதை
சார்ந்தே நிகழும், நகரும்
ஒரு நாளில், ஒருவேளை
சூரியன் கூட தன் கடமையை
மறக்கலாம், பூமி கூட இருளில்
மூழ்கலாம், என்னவளே
என் உலகின் வெளிச்சமாம்
உன் நினைவுகள் என்றுமே
எனக்குள் மறையாது

No comments:
Post a Comment