ஒரு காலத்தில்,
உன் காதலை
கவிதையாய் பார்த்தவன்
நான், அது என்னை
கவிஞனாக்கியது
என் கவிதையை எல்லாம்
வெறும் கட்டுக்கதையாய்
படித்தவள் நீ
அது உன்னை மிகபெரிய
நடிகை ஆக்கியது
ஓர் அழகிய கவிதையாய்
என் வாழ்க்கையில்
உன்னை வர்ணித்தேன்
நீயோ ஒரு காதலியாய்
என் வாழ்க்கையில்
கச்சிதமாய் நடித்தாய்
இந்நாளில் எனக்கு
நீ விலகிச்சென்ற போதும்
வாழ்க்கை அழகிய
கவிதை தொகுப்பாய் திரும்ப
கிடைத்தது
ஆனால் உனக்கு???
கவிதை காதல் என
எல்லாத்தையும் தொலைத்து
விட்ட ஏக்கம் மட்டுமே
நிலைத்தது
இனி அழுதென்ன லாபம்,
எதற்கிந்த சோகம்
மறுபிறவி என்ற ஒன்றிருந்தால்
முயன்றுபார் உண்மை காதலை

No comments:
Post a Comment