
நேற்று தான் எங்கோ படித்தேன்
காதலோ, நட்போ எந்த உறவுமே
பாட்டாம் பூச்சி போல
இறுக பிடித்தால இறந்துவிடுமாம்
விளையாட்டாய் பிடித்தால்
பறந்துவிடுமாம்
ஆனால் எனக்கோ
அதை எப்படி பிடிப்பதென்றும்
தெரியவில்லை, அதற்கும்
என்னிடம் எப்படி இருப்பதென்று
தெரியவில்லை
ஒருவேளை இப்படி இருக்குமோ?
என் வாழ்க்கையில் மட்டும்
உறவின் கையில் அகப்பட்ட
பட்டாம்பூச்சி நானாய்
இருக்கிறேனோ??
என்னை இப்படி கைஆளுகிறதே
எல்லா உறவுகளும்.
ஒவ்வொரு நாளும் மரண
பயத்துடன் பறக்க நினைத்தும்
முடியாமால்....
நரக வேதனையுடன் நகர்கிறது
என் வாழ்க்கை
பிழைப்பேன் என்ற நம்பிக்கை
முற்றிலுமாய் அழிந்து போக
இன்னும் எதற்கு தான்,
எதுவரை தான் என் ஆயுள்
நீண்டிருக்கிறதோ??
பூக்களும் கூட ஒவ்வொரு
ஒவ்வொரு நாளும்
விடியளுக்காய் காத்திருக்க,
நான் மட்டும்
நாளை என்ற ராட்சசனை
எதிர் கொள்ள முடியாமல்
வேண்டிகொண்டிருக்கிறேன்
முழு நேர இருட்டிற்காய்
பட்டம் பூச்சிகள் இரவில்
பறப்பதும் இல்லை
என் வாழ்க்கையில்
விடியலே இனி என்றும்
இல்லை
No comments:
Post a Comment