Tuesday, October 29, 2013

எறும்பு













எறும்பாய் மாறிட ஆசை
படுகிறேன் அல்லது
எறும்பாய் அடுத்த
ஜென்மத்திலாவது பிறந்திட
வேண்டிக்கொள்கிறேன்

காரணம்
எறும்பு தான் தன்னை
காட்டிலும் பல மடங்கு
சுமையை தூக்கி
சுமக்குமாமே

அது போல்
என் எடையை விட பல
மடங்கு எடை கொண்ட
உன் கனத்த நினைவுகளை
இந்த ஜென்மத்தில் மட்டும்
அடுத்த ஜென்மத்திலும்
என் இதயத்தில் 
தூக்கி சுமக்க விரும்புகிறேன்
சுமையாய் அல்ல
சுகமாய்......

No comments:

Post a Comment