இதயம் கண்களை கேட்டது
துரோகியே !!
என்ன லஞ்சம் பெற்றுக்கொண்டு
என்னை அவளிடம்
காட்டிக்கொடுத்தாய் ???
உன்னால் எனக்குள் நுழைந்தவள்
இன்று எங்கே சென்றாள்
என்னை ரணமாக்கிவிட்டு
சுக்குநூறாய் உடைத்துவிட்டு
இனி நீ அழுதென்ன லாபம் ??
போகட்டும்
இனி நீ ஏமாந்தாலும்
இன்னொருவளை பார்த்தாலும்,
நான் ஏமாறப்போவதில்லை
இன்னொருவளை சுமக்கபோவதும் இல்லை
ஏனெனில் நொறுங்கிய என்னை
ஒட்டவைத்து விற்க விருப்பமுமில்லை

No comments:
Post a Comment