பலகனவுகளுடன்
பெண் பார்க்கும் படலம் ...
பெண்ணுக்கும் என்னை பிடித்திருக்க
எனக்கும் அவளை பிடித்திருந்தது ...
ஆனாலும் இது அமையாமல் போனது
பெண்ணின் தந்தை சொன்னாராம்
மாப்பிள்ளை கலர் கம்மி என்று ...
அவமானபடுத்தியதாய்
எனக்குள் ஒரு உணர்வு
பின்பு
என்னை நானே
தேற்றிக்கொண்டேன் இவ்விதமாய்
கலர் கலராய் இருக்க நான் என்ன
வானவில்லா ??
அந்த வான வில்லிலும் இல்லாத
நிறம் எனக்கிருக்கிறதென்ற
பெருமிதம் கொள்கிறேன்
சிறிதுணவனாலும் சுற்றத்தாருடன்
பகிர்ந்து உண்பதை எடுத்துரைக்கும்
அந்த காக்கையும் கூட
கருப்புதான்
காக்கையும் தன் சொந்தமென
சோறு வைத்துவிட்டு
தான் உண்ணும்
எம் தமிழன் கருப்பு தான் ,
இதை மூடநம்பிக்கையென வாதிட்ட எம்
பகுத்தறிவு பகலவன்
அணிந்த மேல்சட்டையும்
கருப்பு தான்
கொட்டும் மலையிலும்
கொளுத்தும் வெயிலும்
அயராது உழைக்கும் எம்
உழவனின் நிறம்
கருப்பு தான்
எந்நிறம் சேரினும்
தன்னிறம் மாறா
இயல்பினை பெற்ற
இந்நிறத்தை
உன் கருவிழியில்
உன் தாய்
கருவறையில்
நீ காணவில்லையா???
உதிரப்போகும் தலைமுடி
வெளுத்துபோனால்
கவலை கொள்ளும் மானிடா
உன் தோல் வெள்ளையாக
முயச்சிற்பது ஏனடா ???
மனித இனத்தில்
மட்டுமன்றி
பிற உயிரனங்களிடமும்,
ஏன் அக்ரினைகளிலும்
கூட இந்நிறத்தை
தவிர்க்கும் உன்னை
கேலியாகத்தான் பார்க்க
தோன்றுகிறது ...
நேற்று பளிச்சிட்டு
இன்று மங்கி
நாளை சுருங்கும்
தோலுக்கும்
அதன் நிறத்துக்கும்
எதற்கிந்த முக்கியத்துவம் ???
என் முண்டாசு
கவிஞன்
வெள்ளைப்பூனையிட்ட
பலநிறம் கொண்ட
குட்டிகளிடமே வேறுபாடு காணாதவன்
அனால் நீயோ
நிறத்தால் எம் பாரத அன்னை
ஈன்ற மக்களில் வேறுபாடு
காணலாகுமோ ???
வெறும் நிறமென்று நில்லாமல்
வரலாற்றில் இதற்குத்தான்
எத்தனை போர்கள்
எத்தனை உயிர் பலிகள்
இது இன்றும்
தொடர்வதுதான் வேதனை
போதும் நண்பா!!!
அடிமை விலங்கையும்
தாழ்வு மனப்பான்மையும்
உடைத்தெறிந்து
இந்த சமூக சீர்கேட்டை
எதிர்த்து
நாம் காட்டுவோம்
நம் முதல்
கருப்புக்கொடி.........
பெண் பார்க்கும் படலம் ...
பெண்ணுக்கும் என்னை பிடித்திருக்க
எனக்கும் அவளை பிடித்திருந்தது ...
ஆனாலும் இது அமையாமல் போனது
பெண்ணின் தந்தை சொன்னாராம்
மாப்பிள்ளை கலர் கம்மி என்று ...
அவமானபடுத்தியதாய்
எனக்குள் ஒரு உணர்வு
பின்பு
என்னை நானே
தேற்றிக்கொண்டேன் இவ்விதமாய்
கலர் கலராய் இருக்க நான் என்ன
வானவில்லா ??
அந்த வான வில்லிலும் இல்லாத
நிறம் எனக்கிருக்கிறதென்ற
பெருமிதம் கொள்கிறேன்
சிறிதுணவனாலும் சுற்றத்தாருடன்
பகிர்ந்து உண்பதை எடுத்துரைக்கும்
அந்த காக்கையும் கூட
கருப்புதான்
காக்கையும் தன் சொந்தமென
சோறு வைத்துவிட்டு
தான் உண்ணும்
எம் தமிழன் கருப்பு தான் ,
இதை மூடநம்பிக்கையென வாதிட்ட எம்
பகுத்தறிவு பகலவன்
அணிந்த மேல்சட்டையும்
கருப்பு தான்
கொட்டும் மலையிலும்
கொளுத்தும் வெயிலும்
அயராது உழைக்கும் எம்
உழவனின் நிறம்
கருப்பு தான்
எந்நிறம் சேரினும்
தன்னிறம் மாறா
இயல்பினை பெற்ற
இந்நிறத்தை
உன் கருவிழியில்
உன் தாய்
கருவறையில்
நீ காணவில்லையா???
உதிரப்போகும் தலைமுடி
வெளுத்துபோனால்
கவலை கொள்ளும் மானிடா
உன் தோல் வெள்ளையாக
முயச்சிற்பது ஏனடா ???
மனித இனத்தில்
மட்டுமன்றி
பிற உயிரனங்களிடமும்,
ஏன் அக்ரினைகளிலும்
கூட இந்நிறத்தை
தவிர்க்கும் உன்னை
கேலியாகத்தான் பார்க்க
தோன்றுகிறது ...
நேற்று பளிச்சிட்டு
இன்று மங்கி
நாளை சுருங்கும்
தோலுக்கும்
அதன் நிறத்துக்கும்
எதற்கிந்த முக்கியத்துவம் ???
என் முண்டாசு
கவிஞன்
வெள்ளைப்பூனையிட்ட
பலநிறம் கொண்ட
குட்டிகளிடமே வேறுபாடு காணாதவன்
அனால் நீயோ
நிறத்தால் எம் பாரத அன்னை
ஈன்ற மக்களில் வேறுபாடு
காணலாகுமோ ???
வெறும் நிறமென்று நில்லாமல்
வரலாற்றில் இதற்குத்தான்
எத்தனை போர்கள்
எத்தனை உயிர் பலிகள்
இது இன்றும்
தொடர்வதுதான் வேதனை
போதும் நண்பா!!!
அடிமை விலங்கையும்
தாழ்வு மனப்பான்மையும்
உடைத்தெறிந்து
இந்த சமூக சீர்கேட்டை
எதிர்த்து
நாம் காட்டுவோம்
நம் முதல்
கருப்புக்கொடி.........
No comments:
Post a Comment