தான் பிரம்மன்
அதிகமாய் மெனக்கெட்டு
இருப்பாரென நினைக்கிறேன்
நொடிப்பொழுதில் தன் படைத்தல்
தொழிலை செய்பவர்,
பொறுமையாய் ஓர் ஓவியம்
தீட்டி பின்பு உன்னை
படைத்திட்டிருக்கிறார் போலும்
அதனால் தானோ நீ அந்த
ஓவியத்திற்கே உயிர் வந்தது
போல் இவ்வாளவு
அழகாய் இருக்கிறாய்??
அப்படி ஓர் ஓவியம்
உண்டெனில் அதை அவர்
கண்டிப்பாக எங்கோ
பத்திரப்படுத்தி இருப்பார்
இதற்கு காரணம்
இரண்டாக தான் இருக்கும்
ஒன்று அவர் தன் படைப்பின்
உச்சத்தை அடைந்து விட்டதன்
ஒரே சாட்சி நீ மட்டும் தான்
மற்றொன்று ஒருவேளை
உன்போன்றதொரு அழகியை
இன்னொருமுறை
படைக்க வேண்டுமெனில்
அவருக்கே பார்த்து செய்திட
நிச்சயமாய் ஓர் மாதிரி தேவை..

No comments:
Post a Comment