Sunday, March 24, 2013

ஓர் அடையாளம்

 














இரு மனங்களை 
இணைப்பதுதான்
காதலாம்..

நல்ல விளக்கம் தான்

ஆனால் இணைப்பிற்கான
அடையாளமா அதன் சின்னம்
இல்லையே.ஓர் அம்பு
இதயத்தை குத்தி கிழிக்கிறது
போல் தானே இருக்கிறது 
காரணம் இருக்கிறது
 
உண்மையில் இந்த காதல்
தொடகத்திலோ முடிவிலோ
மனதில் நுழையும் போதோ,
அல்லது மனதை விட்டு
அகலும் போதோ,
தெரிந்தோ, தெரியாமலோ,
ஒரு மனதையோ அல்லது
இரு மனதயுமோ 
துளைத்து விட்டுதானே
தன் வேலையே செய்கிறது..

இதனால் தான் 
காதலின் சின்னம் இப்படி
ஆகிப்போனது..
இது இணைக்கும்
அடையாளம் அல்ல
இன்றும் என்றும் நம்
மனத்தை துளைத்து அதன்
வலியை உணர்த்தும்
ஓர் அடையாளம்...

அலாரம்

 










அதிகாலை நேரத்து
அலாரமாய் தினமும்
என்னை எழுப்பி என்
வாழ்க்கை பயணத்தை
துவக்கி, அதை
தொடரவும்வைக்கிறது
என்னவளது நினைவுகள்

சில சமயங்களில் மட்டும்
அது எனக்கு தொந்தரவாய்
தோன்றினாலும் கூட
என் அலாரம் இன்றி
ஒரு பொழுதும் எனக்கு
விடிகிறதில்லை

என் வாழ்க்கையின்  
எல்லா நாட்களும்
இந்த நினைவுகளின்
நிழலிலேயே நகர்கிறது

Saturday, March 16, 2013

தாயின் தயவு
















நான் பிறக்கும் முன்பே
பெரும் முயற்சியுடன்
கடும் தவம் செய்திருப்பேன்
போலும், பிறந்த உடனே
கண்டுவிட்டேனே வரம்
தரும் கடவுளை
ஆம் என் தாயை

அவளும் என் தவத்தை
மெச்சி தந்த வரம் தான்
அவள் அன்போ

எது எப்படியோ
என் வேண்டுதல்
எனக்கு மட்டும் இவ்வளவு
சீக்கிரமாய் எளிதாய்
என் தாயே உன் தயவால்
நிறைவேறியது..

நம் காதல்













நான் வாழப்போகுமிந்த 
ஒரே வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு  நிமிடமும், ஏன்
ஒவ்வொரு நொடியும் கூட என் 
ஒரே மனதில் நிறைந்திருக்க 
ஒருவள் இருப்பாள் என்றால்
என்னவளே அது நீ மட்டும் தான்
ஒரேயொரு காரணம் நம் காதல் 

என் அம்மா












சொர்க்கத்தில் நாம்
காண முடியா கடவுள்கள்
நிறைய உண்டாமே,
எனக்கு தெரியவில்லை,

எனக்கு தெரிந்ததெல்லாம்
என் வீட்டிலேயே இருக்கும்
நான் கண்ணில் காணும்
ஒரே தெய்வம்

என் அம்மா.. ..  

இவள் ஒருவளால் மட்டுமே
எனக்கு இறக்கும் முன்பே
சொர்கத்தை காட்ட
முடியும் தன் அன்பால்

அப்பாவி மனம்












என்னவள் என்னை
விட்டுச்சென்ற தடத்தையே
வெறித்து பார்த்தபடி
தேம்பி நிற்கிறது
என் அப்பாவி மனம்

அதற்கு இன்னமும்
கூட தெரியவில்லை
அவளுடனே செல்வதா
இல்லை அவளுக்காய்
ஆயுள் முடியும்வரை 
காத்திருக்கவா என்று..

Friday, March 8, 2013

மாதிரி
















கடவுள் பொதுநலவாதி தான்
ஒத்துக்கொள்கிறேன்
மாதிரியை தானே
வைத்துக்கொண்டாலும்
உன்னை உலகத்திற்கு
தந்துவிட்டரே

ஒருவேளை அவர் அப்படி
செய்யாமல் தன்
படைப்பு திறமையின்
அடையாளமாய் உன்னை
தன்னிடமே வைத்திருந்தால்
உலகில் "அழகிய பெண்"  என்ற
வார்த்தைக்கு எடுத்துக்காட்டே
இருந்திருக்காது
இன்று வரையிலும்...

புகைப்படம்

 














ஆயிரம் வரி கவிதையிலும்
கூட வர்ணிக்க முடியாத
அழகை 
உன் ஒரே புகைப்படம்
தெளிவாய் உரைக்கிறது
மேலும் அது
அழகென்றால் நீ தான்
நீ மட்டும் தான் என 
என்னிடமே வாதிடுகிறது  

உயிரோவியம்

உன்னை படைப்பதற்கு 
தான் பிரம்மன்
அதிகமாய் மெனக்கெட்டு
இருப்பாரென நினைக்கிறேன்

நொடிப்பொழுதில் தன் படைத்தல்
தொழிலை செய்பவர்,
பொறுமையாய் ஓர் ஓவியம்
தீட்டி பின்பு உன்னை
படைத்திட்டிருக்கிறார் போலும்

அதனால் தானோ நீ அந்த
ஓவியத்திற்கே உயிர் வந்தது
போல் இவ்வாளவு 
அழகாய் இருக்கிறாய்??

அப்படி ஓர் ஓவியம்
உண்டெனில் அதை அவர்
கண்டிப்பாக எங்கோ
பத்திரப்படுத்தி இருப்பார்

இதற்கு காரணம்
இரண்டாக தான் இருக்கும்

ஒன்று  அவர் தன் படைப்பின்
உச்சத்தை அடைந்து விட்டதன்
ஒரே சாட்சி நீ மட்டும் தான்

மற்றொன்று ஒருவேளை
உன்போன்றதொரு அழகியை
இன்னொருமுறை  
படைக்க வேண்டுமெனில்
அவருக்கே பார்த்து செய்திட
நிச்சயமாய் ஓர் மாதிரி தேவை.. 

முக-வரி
















உன் முக-வரியில் தானே
ஆயிரமாயிரம் தேவதைகள்
ஒரே நேரத்தில்  
ஒன்றாய் வளம் வந்து
அழகாய் சிரிக்கின்றது 

நிலவு
















நிலவு ஏன் ஒளிர்கின்றது
நிலவு ஏன் கரைகின்றது
என்ற காரணங்கள்
இப்போது தானடி
தெளிவாய் புரிகிறது  

Thursday, March 7, 2013

ஒன்றாகவே
















தோழியே,
என்  தோளில் நீ சாயும் போதும் 
உன் மடியில் நான் வீழும் போதும்
உன் சோகமும், என் வாழ்க்கையும்
ஒன்றாகவே முற்று பெறுகிறது....

Tuesday, March 5, 2013

தேர்வறை


 














இரவு பகலாய் படித்தேன்
ஆனாலும் கூட எவ்வளவு
யோசித்தும் தேர்வறையில்
என்  ஞாபகத்திற்கு
வந்ததெல்லாம்

என் புத்தகத்தில் யாருக்கும்
தெரியாமல் மறைத்து வைத்து
அடிக்கடி நான் பார்த்துக்கொண்டே
எப்போதும் ரசித்துக்கொண்டே  
இருக்கும்

என் தேவதையின் புகைப்படம்
மட்டும் தான்

இசை












இசை எல்லாவற்றையும்
மறக்கச் செய்துவிடுமென
அதை தேர்வு செய்தாயோ
என்னையும், நம் காதலையும்
மறந்துவிட???

இசை மறக்கச்செய்வது
சில சோகங்களையும்
தேவையற்ற சில
எண்ணங்களையும் தான்

நானோ என் காதலோ
உன் சோகமோ அல்லது
உனக்கு தேவையற்ற
எண்ணங்களோ அல்ல

முயன்று வேண்டுமானாலும்
பார் பெண்ணே!!!
இசை மட்டுமல்ல வேறு
எதுனாலும் கூட என்னையும்,
என் நினைவுகளையும்,
நம் காதலையும் உன்னில்
இருந்து அழித்து விட முடியாது

காரணம்
உண்மையான காதல் என்பதே
காதலர்கள் மறைந்தாலும் 
காதலை மறைத்தாலும்
மறந்தாலும், கூட
அதன் நினைவுகளை
ஆழமாய் விதைப்பதே!!!

நம் காதலும் விதிவிலக்கல்ல
அது என்றோ ஏகப்பட்ட
நினைவுகளை உன்னுள்
விதைத்துவிட்டது
இப்போது அறுபடா  
மரமாகி போனதை அவ்வளவு
 எளிதில் அழித்திட 
முன்றாயோ
பேதைப்பெண்ணே

முயன்று தான் பாரேன்...  

காதலை தேடிடு














அவ்வளவாய் நேசித்தும்
நீ என்னை ஏன் பிரிந்தாய்
அடிக்கடி என்னையே நான்
கேட்டுக்கொண்டிருக்க
எனக்கே ஒரு நாள்
விடைகிடைத்தது
அதுவும் கேள்வியாகவே

எனக்கு எத்தனையோ
கவிதைகள் மனதுக்குள்
தோன்ற சில கவிதைகள்
மட்டுமே எழுத்துக்களாய்
வெளிப்படுகிறதே
அது ஏனோ??

பதில் என்னமோ
இரண்டு கேள்விக்குமே
ஒன்று தான் என இன்று
புரிந்துகொண்டேன்

எழுதி விட்ட கவிதைகளை
நான் வாசிப்பதுமில்லை
அதை பற்றி
சிந்திப்பதுமில்லை
ஆனால் எழுதாமல்
விடுபட்ட கவிதையை
நான் மறப்பதேயில்லை
சிந்திக்காமல் இருப்பதும்
இல்லை

என்னவளே நீயும் ஒரு
கவிதை என்பதால்
என்னை பிரிந்தால் தான்
உன்னை நினைத்துக்கொண்டே
இருப்பேன் என நினைத்தாயோ??

என்னை நீ புரிந்துகொண்டதும்
இதுதானோ???
கவிதையை மறக்கலாம்
என் உயிரே உன்னை நான்
மறப்பேனோ??

நீ என்னை
நேசித்தாலும், வெறுத்தாலும்
அருகில் இருந்தாலும்,
தொலைவில் மறைந்தாலும்
நாம் சேர்ந்தாலும், பிரிந்தாலும்

நான் உன்னை மறப்பதுமில்லை
எந்நாளும் உன்னை விட்டு
விலகுவதும்மில்லை

என கவிதையை விடவும்
ஏன் இவ்வுலகில்,
எல்லாவற்றையும் விட
உன்னை அதிஅதிகமாய்
நேசிக்கறேன்..

என்னவளே
எந்நாளும் எதற்காகவும்
எனை பிரிந்து செல்ல
காரணம் தேடாதே
மாறாய் உன்னுள் மறைந்து, 
மங்கிகொண்டிருக்கும்
நம் காதலை தேடிடு... 

சிறைக்குள் பிறை













காதல் என்வென்று
கற்றுக்கொண்டதால் 
தனிமைச் சிறையில்
அடைக்கப்பட
அப்போதும் கூட 
கூட அழகாய்த் தானே
ஒளிர்கிறது என் அழகிய 
தேயா பிறை

திரை மறைவில்
அடைபட்டிருக்கிறதோ 
சிறைக்குள் பிறை ???

கற்றுக்கொள்கிறேன்
















தோழியே  
நீ சொல்லிகொடுக்கும்
போது,
உன் வார்த்தைகளில்
காதலை மட்டுமல்ல
நம் வாழ்க்கையையும் கூட 
புரிந்துகொள்கிறேன்
வெகு சுலபமாய்....

Saturday, March 2, 2013

மழையும் நானும்
















பலத்த மழை, இடி, மின்னல்
என எதுவெல்லாமோ
எவ்வாறோ  எல்லாம்  
முயன்றும் முடியவில்லை
குடைக்கு அடியில்
சேர்ந்தேயிருக்கும் என்னையும்
என் தனிமையும் பிரித்திட

இன்னமும் இவற்றின் முயற்சி
தொடர்ந்து கொண்டே தான்
இருக்கிறது 

முகம் மறைத்து












என்னவளே எந்நாளும்
முகத்தை மூடிக்கொண்டு
வெட்கப்படாதே
இந்த உலகம் இனியாவது
கற்றுகொள்ளட்டும்
வெட்கத்தின்
செயல்முறையை....

தனிமை விரும்பி













நீ என்னை விட்டுச் 
சென்ற பின்பு
காதல் , நட்பு,
உறவு, பாசம், அன்பு
இதுபோல் எதையுமே
நேசிக்ககூடாது
என்று தீர்மானமாய் 
இருந்தேன்

ஆனாலும் என்னை
அறியாமலே
நேசிக்க துவங்கிவிட்டேன்
என் தனிமையை

 நான் நேசித்ததெல்லாம்
என்னை விட்டு பிரிந்து போக
தனிமையே நீ மட்டுமாவது
என்னை தனித்து விட்டு 
என்னை விலகி விடாதே

செத்தாலும் பிரியமாட்டேன்
என்றவளும் பிரிந்து போனாள் 
ஆனால் நீயோ என் 
உயிர் உள்ள வரை மட்டும்
என்னுடன் இருந்தாலே போதும்

இறப்பிற்கு பிறகோ நீ,
நான் வேறல்ல அப்போது
நாம் ஆகிப்போவோம் 
அப்போது தனிமையே நீ
நினைத்தாலும் கூட
என்னை விலகுதல் ஆகாது 

இன்று நீ என்னை
பிரிவதாயில்லை 
நானும் உன்னை
விடுவதாயில்லை