மறப்போம் மன்னிபோம்
என்பதை தவறாக
புரிந்து கொண்டாயோ
நீ, என்னை மறந்து விட்டு
தூக்கி எறிந்துவிட்டு
போனதை மிக எளிதாய்
மன்னித்துவிடு என்கிறாயே
எனை கொன்றாலும் கொன்றவனை
மன்னிக்க வேண்டுமென
நினைப்பவன் நான், ஆனாலும்
ஏனோ தெரியவில்லை
முதல் முறையாய் மன்னிக்க
மனம் மறுக்குதடி
காரணம் நீ என்னை
கொன்றிருக்கலாம், என் மனதை
கொன்றாயே அது ஏனடி??
காதலியாய் அல்ல இப்போது
கொலையாலியாய் அல்லவா
தெரிகிறாய் என் கண்களுக்கு
கொலையாளிக்கும் தன் தவறை
உணரும் போது மன்னிப்புண்டு
அது கூட உனக்கு கிடைக்காமல்
இருக்கும் போதே புரியட்டும்
உன் பாவத்தின் அளவு
பழகிய பாவத்திற்காய்
மன்னிக்க முயல்கிறேன்
ஒருவேளை முடியாமல்
போனால் நீ மறந்து விடு
உனக்கு தான் அது பழகிவிட்ட
பழக்கமாயிற்றே
ஆனாலும் நாம் இருவருமே
நம் காதலுக்கு பதில் சொல்லியாக
வேண்டுமே
என் உண்மைக்காதல் உன்னை
மறக்குமோ மன்னிக்குமா
என்பதை நானறியேன்
அதன் கையிலேயே இதை
விட்டு விடுகிறேன்
என் பயம் எல்லாம் ஒன்று
தான் காதல் என்னை
மன்னிக்குமா என்பது தானது
உன்னை என் காதலியாய்
தேர்ந்தெடுத்தற்கு
மரணத்தை தண்டனையாய்
பெற்றுவிடுவேனோ??
அதனிடம்
உன்னை நான் மன்னித்தால்
எனக்கு தண்டனை உறுதி
உன்னை நான் தண்டித்தால்
எனக்கு மன்னிப்பு உறுதி
பிழைத்துப்போ
வாழ்ந்து விட்டு போ
நானே ஏற்றுகொள்கிறேன்
தண்டனையை

No comments:
Post a Comment