பேரழகு
போடி!! இனி
நான் கவிதை
எழுதுவதாயில்லை
கவிதைக்கு சிறப்பே
அழகாய் இருக்கும்
ஒன்றை மற்றொன்றுடன்
ஒப்பிட்டு எழுதுவது தான்
ஆனால் உன் அழகை
இந்த உலகில் உள்ள
எதற்கு ஒப்பிட்டு எழுத??
அப்படி ஒன்று இவ்வுலகில்
இருப்பதாய் தெரியவில்லை
உன் அழகுடன் ஒப்பிட
நான் இந்த உலகை தாண்டி
வேறெதுவும் கண்டதுமில்லை
No comments:
Post a Comment