அசட்டுச்சிரிப்பு
இவள்
சீக்கிரம் வாடும் பூக்களை
விற்று வாழ்ந்தும் கூட
இவள்
முகத்தில் வாடாமல்
இன்னமும் வாழ்கிறது
மௌனமாய், நாம்
யாருமே கண்டிராத
ஓர் அசட்டுச்சிரிப்பு
அதில் மயங்கியதால் தான்
தன்னை பறிக்கும் போதும்
கூட எந்த பூவும்
இவளிடம்
கோபித்துக்கொள்வதில்லை
No comments:
Post a Comment