புகைப்படம்
அன்பே நீ
படமெடுக்க அந்த
ஆழ்கடலும் அலையடித்து
ஆர்ப்பரித்து சிரிக்கின்றது
அந்த சூரியனும்
அஸ்தமனமாக மறுக்கிறது
நிலவோ வெட்கத்தில்
மேகத்துக்குள் மறைந்து தன்
முகம் காட்ட மறுக்கின்றது
இதெல்லாம் விடுத்தது
அழகாய் புகைப்படம்
எடுத்திருக்கின்றாயே
எல்லோரிடமும்
மறைத்தே வைத்திருக்கும்
என் மனதை
No comments:
Post a Comment