Saturday, October 22, 2011

நட்பை நம்புகிறேன்


 












நட்பு ஒன்றுதான் உலகத்தில்
சிறந்ததென்றிருந்தேன்
என் நம்பிக்கை பொய்யாகி ,
நட்பும் கூட காயப்படுத்தும்
என்றுணர்ந்துகொண்டேன் ..

காரணமேதுமின்றி
பேசமறுத்து,என்னை தவிர்த்து
தனிமை படுத்தி ரசி
க்கின்றனர்
நரகாசுரனை அழித்ததால்
தீபாவளி கொண்டாடினார்கள்
இவர்களோ ,
என் நட்பை வதைத்து
கொண்டாடுகிறார்கள்
அவர்களுக்கு
இதற்காவது நானும்
என் நட்பும் உதவியதாய்
எண்ணிக்கொள்கிறேன் ...
ஏனெனில்
அவர்கள் நடித்திருந்தாலும்
நான் நம்புகிறேன் என்
உண்மையான நட்பை!!!

No comments:

Post a Comment