Friday, October 14, 2011

கொலு பொம்மை















அழகிய கொலு பொம்மை
போல் பிரிந்து சென்ற
வள் நினைவுகள் ...
பல சமயம் உபயோகமற்று
பரணில் கிடந்தாலும்,
எடுக்கும் போது
அழகாய் தெரிகிறது
ரசிக்க தோன்றுகிறது
கவலைகள் மறைகிறது
 

பொம்மையோ, நினைவுகளோ
இனி கிடப்பில்
போட வேண்டாம் என்றும்
கூட தோன்றுகிறது
ஆயினும்
வேறு வழியின்றி
திரும்ப
பரணுக்கே செல்கின்றது

No comments:

Post a Comment