Friday, October 14, 2011

வலி
























என்
நெஞ்சில் நிறைந்தவளை
மறக்கமுடியாமல்
இரத்தத்தில் கரைந்தவளையாவது
வெளியேற்றி விடலாம்
என்ற எண்ணத்திலேயே
இந்த கொடூர முயற்சி...

இது மூடத்தனம் ,
இது மிருகத்தனம்
என்பீர்கள்
இது முட்டாள் தனம்
என்பதை நான் அறிந்தும்
என் செய்வேன் ?
சில சமயங்களில்
சாக்கரடீஸ்களையும்
கூட தலைகுப்புற
சாக்கடையில்  தள்ளும் காதலில்
முன்பு விழுந்தேன்
அதனால்
இப்போது வீழ்ந்தேன்

அவள்
பிரிவை காட்டிலுமா
இது வலி கொடுத்துவிடும் ??

வலி, வலி நிவாரணி
இரண்டுமேயான
காதல் விசித்திரமானது தான் ..
அவள் பிரிந்த
போது
வலி கொடுத்தது
அவளை மறக்க நினைத்து
இப்படி காய
ப்படுத்திக்கொண்ட
போதோ வலி மறந்தது ..

என் கடைசி சொட்டு
இரத்தம் வெளியேறும் முன்
நான் கண்ட உண்மையை
சொல்லிவிடுகிறேன்...
காதல் சுகமான வலியல்ல
அது கேட்பது என் போன்ற
அப்பாவிகளின் நரபலி

No comments:

Post a Comment