Saturday, July 28, 2012

தாலாட்டு
















தாலாட்டு சிறு வயதில் 
மட்டும் தானா ??
சிறு குழந்தைக்கு 
மட்டும் தானா ??
யார் சொன்னது இப்படி??

எனக்கோ என் தாயின் 
வார்த்தைகள் எல்லாமே  
தாலாட்டு தான் எப்போதும் 

அதனால் தானோ என்னமோ 
அதிகாலையில் அவள் எழுப்பும் 
சத்ததிற்கும் கூட 
தூங்கிக்கொண்டிருக்கிறேன்
என்னையும், உலகையும் மறந்து  

நண்பா!!
ஒரு வேளை நீயும் வேண்டுமென்றே
காலைக்கதிரவனை  காண்பதை 
புறக்கணிப்பாயேயானால் 
உன்னையும் அதற்கு 
திட்டுவார்களேயானால் 
பெருமையாக சொல்லிவிடு 
உன் தாய் தாலாட்டின் 
மகிமையை

No comments:

Post a Comment